இவருக்கு ஏத்த விருது தான் இது!

"கலைமாமணி "விருது பெற இருக்கிறார் பிரபல நடிகர்!
 
"கே ஜே ஆர் ஸ்டுடியோஸின்" ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் வாழ்த்து!

தனது நடிப்பாலும்,தனது திறமையாலும் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் "நடிகர் சிவகார்த்திகேயன்". ஆரம்ப காலத்தில் இவர் பல காமெடி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், காமெடியனாகவும் , நடித்துக் கொண்டிருந்தவர். இப்போது  நீங்க முடியாத கதா நாயகனாக உள்ளார் என்பது அவரின் திறமைக்கு கிடைத்த பரிசுதான்.

siva karthikeyan

தற்போது தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "டாக்டர் ". இத்திரைப்படத்திற்கு இவரும், இவரது ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். மேலும் இவர் நடிக்கயிருக்கும் "டான்" திரைப்படமும் பூஜை போட்ட நிலையில், இவரின் பிறந்த நாளன்று "அயலான்" திரைப்படத்தின் ஒரு பாடல் வெளியாகி வைரலாக பரவியது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் "ஒரே கல்லில் மூன்று மாங்காய்" என்று நினைத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் இவர் "கேடி பில்லா கில்லாடி ரங்கா", "எதிர்நீச்சல்"," ரஜினிமுருகன்"," வருத்தப்படாத வாலிபர் சங்கம்" போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசமாக இழுத்துக் கொண்டார். "கலைமாமணி" விருது பெறும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு "கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்" தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளது. இவ்விருது நடிகர் சிவகார்த்திகேயன் உழைப்பிற்கும், விடா முயற்சிக்கும், திறமைக்கும் கிடைத்த பரிசு என்று அவரது ரசிகர்கள் எண்ணி கொண்டாட்டத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர்.

From around the web