இந்த "வேலண்டைன்ஸ்டேக்கு" பெரிய கிப்ட்டா இது...!

வெளியாகியது "செல்லக்குட்டி" பாடல்...,
 
வைரலாக பரவி வருகிறது  சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் பாடல்...,

"ஜிகிரி தோஸ்ட்" என்ற பாடலைக் கேட்டால் முதலில் ஞாபகம் வருவது நடிகர் சுரேஷ் தான். நடிகர் சுரேஷ் நடிப்பில் வெளியாகி இருந்த "பில்லா பாண்டி" என்ற திரைப்படம் ரசிகர்களிடையே குறிப்பாக "தல" அஜித்தின் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.மேலும் இவர் விஷால் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற "மருது" என்ற திரைப்படத்திலும் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

R K suresh

சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற "நடிகர் சிவகார்த்திகேயன்" நடிப்பில் வெளியாகிய "நம்ம வீட்டு பிள்ளை" என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார்.மேலும் நடிகர் விக்ரமுடன் "ஸ்கெட்ச்" என்ற திரைப் படத்திலும் இவர் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் மட்டுமல்லாது "பிலிம் புரடியூசர்" என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் "கும்கி" பட கதாநாயகன் விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகி பொங்கலன்று வெளியான "புலிகுத்தி பாண்டி" திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "வேட்டை நாய்".இப்படத்தில் இவருடன் "நடிகர் ராம்கி "மற்றும் "நடிகை சுபிக்க்ஷா" நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் "கணேஷ் சந்திரசேகரன்" இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தில் இருந்து "செல்லக்குட்டி" என்ற பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவுகிறது. மேலும் இப்பாடல் வரவிருக்கும் "லவ்வர்ஸ்டேக்கு "காதலர்களுக்கு ஒரு பரிசாகவே அமைந்துள்ளது.

From around the web