இந்த நடிகரும் இந்த ட்ரைலரை பார்த்து விட்டார்....!

நின்னில நின்னல படத்தின் ட்ரைலரை  பார்த்தார் நடிகர் விஜய் தேவரகொண்டா...!
 
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ட்விட்டர் பக்கம் கூறும் கருத்து...!

தனது நடிப்பாலும் தனது அழகாலும், ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவரது நடிப்பில் வெளியாகிய "கீதா கோவிந்தம்" திரைப்படம் வேற லெவல் ஹிட்டடித்தது. இவர் அர்ஜுன் ரெட்டி ,டியர் காம்ரேட் ,டாக்ஸிவாலா போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "நின்னில‌ நின்னில" படத்தின் ட்ரெய்லர் டிரைலருக்கு கருத்து கூறியுள்ளார் .

vijay devarakonda

" நின்னில நின்னில" என்ற தெலுங்கு  திரைப்படம் தமிழில் "தீனி" என்ற பெயரில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் மெர்சல் நாயகி நித்யா மேனன் நடித்துள்ளார். இவர் ஓகே கண்மணி, காஞ்சனா 2 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இவருடன் நடிகர் அசோக்செல்வன் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய "ஓ மை கடவுளே" திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

நடிகை நித்யா மேனன் மற்றும் நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் இத்திரைப்படத்தில் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" திரைப்படத்தின் கதாநாயகியாக  ரிடுவர்மா   இணைந்து நடித்துள்ளார்.தற்போது இத்திரைப்படத்தின்  ட்ரெய்லரை பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா  தனது ட்விட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

From around the web