கமல் படத்தை கலாய்த்த ‘திரெளபதி’ இயக்குனர்: நெட்டிசன்கள் ஆவேசம்!

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'இருட்டுஅறையில் முரட்டுகுத்து 2' என்ற திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ், இயக்குனர் பாரதிராஜாவின் டிக் டிக் டிக் படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் அதன் பின் நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவம் காரணமாக பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டார் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் தற்போது திரைஉலக மேதையான கமலஹாசனின் விக்ரம் படத்த்ன் டைட்டில் டிரைலரை விமர்சனம் செய்தது ‘திரெளபதி’ இயக்குனர் மோகனுக்குகண்டனங்கள் குவிந்து வருகின்றனர்

vikram

கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரெய்லர் நார்கோஸ்: மெக்சிகோ சீசன் 2’ என்ற அமேசான் படத்தின் அப்பட்டமான காப்பி என்று மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். இரண்டு படங்களின் டிரைலர் வீடியோவையும் அவர் குறிப்பிட்டிருந்தார் 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நெட்டிசன்கள் ’நீங்கள் என்ன ஜேம்ஸ் கேமரூனா?  கமல் படம் போன்று ஒரே ஒரு உருப்படியான படம் எடுக்க உங்களால் முடியுமா? இந்த டிரைலரில் உள்ள  விறுவிறுப்பான காட்சியை உங்களால் ஒரு முழு படத்தில் எடுக்க முடியுமா என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் 

இவ்வளவுக்கும் இந்த இரண்டு படங்களின் டிரைலர்களில் ஒரு சில ஒற்றுமையான காட்சிகள் மட்டுமே இருப்பதை வைத்து அப்பட்டமான காப்பி என்று கூறுவது எப்படி என்று நெட்டிசன்கள்கேள்வி எழுப்பி வருகின்றனர். நெட்டிசன்களின் இந்த அதிரடி கண்டனங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web