பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஐந்து பேர்களும் வேஸ்ட்: நெட்டிசன்கள் விமர்சனம் 

 

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 12 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த மூன்று சீசன்களில் இல்லாத அளவில் இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் மிகவும் மந்தமாக விளையாடி வருகின்றனர் 

சோம்சேகர், ஆஜித், சம்யுக்தா, ரமேஷ் மற்றும் ஷிவானி ஆகிய 5 பேரும் எதற்காக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தோம் என்பதை மறந்துவிட்டு மூன்று வேளை சாப்பிட்டு விட்டு எந்த வித விளையாட்டிலும் ஈடுபாடு இல்லாமல் அமைதியாக இருப்பது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது 

அவ்வப்போது ஜோக்கடித்து தானும் விளையாட்டில் இருப்பதாக சோம்சேகர் உறுதி செய்ய முயன்றாலும் அவரது எந்த நடவடிக்கையும் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல்தான் ஜித்தன் ரமேஷ் எந்தவித பரபரப்பை ஏற்படுத்தாமல் அமைதியாக உள்ளார். ஷிவானி, ஆஜித், மற்றும் சம்யுக்தா  சமித்தா ஆகிய மூன்று பேர்களை சொல்லவே வேண்டாம் இவர்கள் வாயை திறப்பதை அரிதாக உள்ளது 

இந்த லிஸ்டில் கேப்ரில்லா இருந்த நிலை மாறி தற்போது கலகலப்பாக மாறத் தொடங்கி விட்டார். இவர்களுக்கு நேர்மாறாக மிக அதிகமாகப் பேசி பழகி வருபவர்கள் சுரேஷ் அனிதா மற்றும் அறந்தாங்கி நிஷா என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும் போட்டியின் கடைசி வரை செய்வதற்கு கூட வாய்ப்பு உள்ளது என்பது நெட்டிசன்கள் விமர்சனமாக உள்ளது 

இரண்டு வாரம் முடிந்த பின்பும் அமைதியாக ஒன்றுமே செயல்படாமல் இருக்கும் சோம்சேகர், ஆஜித், சம்யுக்தா, ரமேஷ் மற்றும் ஷிவானி ஆகியோர் இந்த போட்டிக்கு தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது

From around the web