இந்த வார டாஸ்க்கில் மோசமாக விளையாடியவர்கள் இவர்கள்தான்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படுசரிவினைச் சந்தித்தது. வைல்டு கார்டு என்ட்ரியாக கஸ்தூரி அனுப்பப்பட்டும் எந்தப் பலனும் அளிக்கவில்லை. இதனால் தயாரிப்புக் குழு எவ்வளவு முயன்றாலும் இழந்த டி ஆர் பியை வனிதாவால் மட்டுமே மீட்டுத் தர முடியும் என்று தெரிந்துகொண்டு வனிதாவையே வீட்டுக்குள் அனுப்பினர். நேற்றுடன் பிக்பாஸ் வீட்டில் ஹோட்டல் விருந்தாளி டாஸ்க் முடிவு அடைந்தது. எப்போதும்போல் போட்டியில் சிறப்பாக விளையாடியவர்கள் மற்றும்
 
இந்த வார டாஸ்க்கில் மோசமாக விளையாடியவர்கள் இவர்கள்தான்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படுசரிவினைச் சந்தித்தது.

வைல்டு கார்டு என்ட்ரியாக கஸ்தூரி அனுப்பப்பட்டும் எந்தப் பலனும் அளிக்கவில்லை. இதனால் தயாரிப்புக் குழு எவ்வளவு முயன்றாலும் இழந்த டி ஆர் பியை வனிதாவால் மட்டுமே மீட்டுத் தர முடியும் என்று தெரிந்துகொண்டு வனிதாவையே வீட்டுக்குள் அனுப்பினர்.

இந்த வார டாஸ்க்கில் மோசமாக விளையாடியவர்கள் இவர்கள்தான்!

நேற்றுடன் பிக்பாஸ் வீட்டில் ஹோட்டல் விருந்தாளி டாஸ்க்  முடிவு அடைந்தது. எப்போதும்போல் போட்டியில் சிறப்பாக விளையாடியவர்கள் மற்றும் மோசமாக விளையாடியவர்கள் தேர்வு செய்யும் செய்முறை தொடங்கியது.

இதில் செய்முறையில், அவரவர் சொந்த கருத்தினை திணித்து தேவையே இல்லாமல், அபிராமியை ஜெயிலுக்குள் அனுப்பும்விதமாக அனைத்து போட்டியாளர்களும் ஆளாளுக்கு கருத்துகளை கூறி, அவர் ஆங்கிலம் பேசினார் என்று பேருக்கு ஒரு காரணத்தைக் கூறி அதை வலுவான காரணமாக ஆக்கினர்.

அபிராமியுடன் மோசமாக ஆடியவர்கள் பட்டியலில் இணைந்தவர் வைல்டு கார்டு போட்டியாளர் கஸ்தூரி. கஸ்தூரியும் அபிராமியும் தங்களுக்கான போட்டிகளை சரியாக செய்யவில்லை என பலரும் தங்களது சொந்தக் கருத்தினை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மோசமாக ஆடியவர்களாக அவர்களையே தேர்வு செய்தனர்.

From around the web