இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் இவர்கள்தான்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் கடந்த வாரம் ஹோட்டல் டாஸ்க்கில் விருந்தாளியாக உள்ளே நுழைந்தார் வனிதா. போன வேலையினை சிறப்பாக செய்து முடித்தார் வனிதா, சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கிறேன் என்ற பெயரில், ஏதேதோ பண்ண கடைசியில் மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததுதான் மிச்சம். வார இறுதிவரை பரபரப்பாகவே போன பிக் பாஸ் தற்போது சற்றே தணிந்துள்ளது, அதாவது வாரத்தின் முதல் நாளான நேற்று வழக்கம்போல்
 
இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் இவர்கள்தான்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் கடந்த வாரம் ஹோட்டல் டாஸ்க்கில் விருந்தாளியாக உள்ளே நுழைந்தார் வனிதா.

போன வேலையினை சிறப்பாக செய்து முடித்தார் வனிதா, சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கிறேன் என்ற பெயரில், ஏதேதோ பண்ண கடைசியில் மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததுதான் மிச்சம்.

வார இறுதிவரை பரபரப்பாகவே போன பிக் பாஸ் தற்போது சற்றே தணிந்துள்ளது, அதாவது வாரத்தின் முதல் நாளான நேற்று வழக்கம்போல் நாமினேஷன் ப்ராசஸ் நடந்தது.

இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் இவர்கள்தான்!!இதில் கஸ்தூரி, சேரன், தர்சன், சாண்டி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தபின் கஸ்தூரியின் முதல் நாமினேஷன் இதுவே ஆகும். அவர் நிச்சயம் நாமினேட் ஆவார் என்பது அவருக்கு தெளிவாகத் தெரியும்.

கவின்தான் ஆரம்பம் முதலே கஸ்தூரி மீது வஞ்சம் தீர்த்து வருகிறார், இவரை எப்படியாவது வெளியேற்றிவிட்டால் கவின்- சாண்டி குரூப்புக்கு பதிலடி கொடுக்க யாரும் இல்லை என்று பலரும் புலம்பி வருகின்றனர்.

அதேபோல் சாண்டியை வெளியேற்றிவிட்டால் போதும், கவின் போடும் ஆட்டம் அடங்கிவிடும் என்பது மற்றொரு தரப்பினர் கருத்து.

From around the web