என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் இவைதான்.. ராஷ்மிகா பேட்டி!!

நடிகை ராஷ்மிகா மந்தண்ணா, கிரிக் பார்ட்டி என்னும் கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கன்னட மொழியில் அறிமுகம் ஆகியிருந்தாலும், தெலுங்கு சினிமாவிலே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தமிழ் ரசிகர்கள் பலரும் இவர் எப்போது தமிழ் சினிமாவில் கால் பதிப்பார் என்று ஏங்கியிருக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான சுல்தான் படத்தின்மூலம் ராஷ்மிகா தமிழில் கால் பதிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பானது நவம்பர் மாதம் முதல்
 
என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் இவைதான்.. ராஷ்மிகா பேட்டி!!

நடிகை ராஷ்மிகா மந்தண்ணா,  கிரிக் பார்ட்டி என்னும் கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கன்னட மொழியில் அறிமுகம் ஆகியிருந்தாலும், தெலுங்கு சினிமாவிலே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

தமிழ் ரசிகர்கள் பலரும் இவர் எப்போது தமிழ் சினிமாவில் கால் பதிப்பார் என்று ஏங்கியிருக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான சுல்தான் படத்தின்மூலம் ராஷ்மிகா தமிழில் கால் பதிக்கிறார்.

என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் இவைதான்.. ராஷ்மிகா பேட்டி!!

இந்த படத்தின் படப்பிடிப்பானது நவம்பர் மாதம் முதல் நடைபெற்றுவந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது வீட்டில் இருந்துவரும் ராஷ்மிகா என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் இவைதான்” என்று கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, “நான் என் பள்ளிக் காலம் முதல் விடுதியிலேயே தங்கிப் படித்து வருகிறேன், எனது வாழ்க்கைப் பயணமானது மாரத்தான் ஓட்டம் போன்றது. ஓடிக் கொண்டே இருந்த நான், இப்போதுதான் ஓய்வில் உட்கார்ந்துள்ளேன். என் பெற்றோர்களுடன் நேரம் செலவிடுகிறேன்.

இந்த இரண்டு மாதங்களைப் பெரிதளவில் பயனுள்ளதாகப் பயன்படுத்தவில்லை என்றாலும், நான் ஓய்வு எடுக்கச் செய்துள்ளேன் என்பது மகிழ்ச்சியான விஷயமாகும். வேலையைப் பற்றி சிந்திக்காமல் ஒவ்வொரு நொடியையும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

From around the web