இவங்க 3 பேருதான் பெஸ்ட் ஹீரோஸ்… த்ரிஷா ஓப்பன் டாக்!!

கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியாவில் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதனால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் நடிகர், நடிகைகள் தாங்கள் பொழுதுபோக்கும் விதம் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை த்ரிஷா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுதல், வீடியோ பதிவிடுதல் என்று இருந்துவருகிறார். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் என்னை அறிந்தால் படத்தில் நடித்ததையடுத்து தற்போது குறும்படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இதுகுறித்த டீசரை
 
இவங்க 3 பேருதான் பெஸ்ட் ஹீரோஸ்… த்ரிஷா ஓப்பன் டாக்!!

கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியாவில் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதனால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் நடிகர், நடிகைகள் தாங்கள் பொழுதுபோக்கும் விதம் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை த்ரிஷா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுதல், வீடியோ பதிவிடுதல் என்று இருந்துவருகிறார். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் என்னை அறிந்தால் படத்தில் நடித்ததையடுத்து தற்போது குறும்படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

இவங்க 3 பேருதான் பெஸ்ட் ஹீரோஸ்… த்ரிஷா ஓப்பன் டாக்!!

இதுகுறித்த டீசரை சமீபத்தில் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்த த்ரிஷாவுக்கு ரசிகர்கள் நிச்சயம் ஹிட் ஆகும் என வாழ்த்துகளைக் கூறினர். நிச்சயம் அது விண்ணைத் தாண்டி வருவாயா பார்ட் 2 வாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இந்தநிலையில் நேற்று இன்ஸ்டாவில் அவர் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர், இந்திய அளவில் சிறந்த 3 நடிகர்கள் யார்? என்று கேட்க, கமல்ஹாசன், மோகன்லால், அமீர்கான் என்று கூறியுள்ளார்.

அவர் அஜித்- விஜய் இருவரில் யாரையாவது சொல்வார் என்று நினைத்த ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. இவர் உலக நாயகனுடன் மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web