மதுமிதாவிற்கான நியாயம் கிடைக்கவில்லை- பார்வையாளர்கள் கொதிப்பு

விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ், நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டார். கையில் கட்டுடன் மதுமிதா வெளியே வந்தார். கமல் ஹாசன் வருத்தப்பட்டு ‘தட்டில் வைத்துக்கொடுத்த வெற்றியை தட்டிவிட்டு இங்கே வந்து நிற்பது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது.’ என்றார். அதற்கு பதிலளித்த மதுமிதா உங்களுக்கும் எனக்கு மட்டுமே தெரிந்த விஷயம் சார், அந்த அளவு உள்ளே நடந்தது என்றார். கடந்த வாரம் வரை மதுமிதா வெற்றியாளராக
 
மதுமிதாவிற்கான நியாயம் கிடைக்கவில்லை- பார்வையாளர்கள் கொதிப்பு

விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ், நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டார். கையில் கட்டுடன் மதுமிதா வெளியே வந்தார்.

கமல் ஹாசன் வருத்தப்பட்டு ‘தட்டில் வைத்துக்கொடுத்த வெற்றியை தட்டிவிட்டு இங்கே வந்து நிற்பது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது.’ என்றார். அதற்கு பதிலளித்த மதுமிதா உங்களுக்கும் எனக்கு மட்டுமே தெரிந்த விஷயம் சார், அந்த அளவு உள்ளே நடந்தது என்றார்.

மதுமிதாவிற்கான நியாயம் கிடைக்கவில்லை- பார்வையாளர்கள் கொதிப்பு

கடந்த வாரம் வரை மதுமிதா வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இது பார்வையாளர்கள் மட்டுமின்றி கமல்ஹாசனையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மதுமிதா வெளியேறியதற்குக் காரணம், கவின்தான் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த மூன்று நாட்களாகவே கஸ்தூரி, சேரன் மற்றும் மதுமிதாவைப் பற்றி நக்கல் செய்வது மட்டுமல்லாமல், அவர்களைக் காயப்படுத்தும்படியாக பாடல்களைப் பாடினர்.

இது பார்ப்போர் மனதையே உருக்கும்படியாக இருந்தது, பலரும் இந்த விஷயங்களால் கவின் மற்றும் சாண்டி மீது கடும் கோபத்தில் இருந்தனர். பல அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கையை அறுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

ஆனால் இதற்கான நியாயம் கிடைக்கவில்லையே, குறைந்தபட்சம் நடந்ததைக் காட்டியிருந்தால் மக்கள் கவின் மற்றும் சாண்டியின் உண்மை குணத்தினை அறிந்திருப்பர் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

From around the web