ஜூன் மாதம் வரை சினிமாப் படப்பிடிப்பு கிடையாது.. ஆர் கே செல்வமணி பேட்டி!!

இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 31 வரையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பணிக்குத் திரும்ப முடியாததால் உணவுத் தட்டுப்பாடு உட்பட பல அவதிகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தமிழக முதலமைச்சர் பல பணிகளிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வினை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தநிலையில சினிமாவினைப் பொறுத்தவரை படப்பிடிப்புகள் அல்லாது நடைபெறும் பின்னணி வேலைகளுக்கு அனுமதி சமீபத்தில் வழங்கப்பட்டது. அதன்பின்னர் கடந்தவாரம், சின்னத் திரை நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பெரியதிரை படப்பிடிப்பு குறித்து
 
ஜூன் மாதம் வரை சினிமாப் படப்பிடிப்பு கிடையாது.. ஆர் கே செல்வமணி பேட்டி!!

இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 31 வரையும்  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் பணிக்குத் திரும்ப முடியாததால் உணவுத் தட்டுப்பாடு உட்பட பல அவதிகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தமிழக முதலமைச்சர் பல பணிகளிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வினை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில சினிமாவினைப் பொறுத்தவரை படப்பிடிப்புகள் அல்லாது நடைபெறும் பின்னணி வேலைகளுக்கு அனுமதி சமீபத்தில் வழங்கப்பட்டது. அதன்பின்னர் கடந்தவாரம், சின்னத் திரை நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜூன் மாதம் வரை சினிமாப் படப்பிடிப்பு கிடையாது.. ஆர் கே செல்வமணி பேட்டி!!

பெரியதிரை படப்பிடிப்பு குறித்து பேசிய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர் கே செல்வமணி, “சின்னத்திரைக்கு 40 பேர் வைத்து படம் எடுக்க முடியும். ஆனால் சினிமாவில் அது கஷ்டம். இப்போதைக்கு சின்னத்திரை படப்பிடிப்புகள் முடிந்து, அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனில் அதனைக் கருத்தில் கொண்டே சினிமாப் படப்பிடிப்புகள் குறித்து பேசமுடியும். இப்போதைய சூழலில் ஜூன் மாத இறுதிவரை சினிமா படப்பிடிப்புகள் நடைபெற வாய்ப்பில்லை’ என்று கூறியுள்ளார்.

From around the web