அப்புறம் என்ன பூஜ போட்டாச்சு!

"எதிர்நீச்சல்","மான்கராத்தே", "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" இப்படி பல வெற்றி படங்களை கண்டவர் "நடிகர் சிவகார்த்திகேயன்" தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படம் "டான்". இத்திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்ட இப்படம் படப்பிடிப்புக்கு தயாராக உள்ளது. இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன்" நடிக்க உள்ளார். இவர்கள் இருவரின் நடிப்பில் உருவாகியுள்ளதிரைப்படம்"டாக்டர்". இந்நிலையில் இவர்களின் ஜோடி மீண்டும் இணைந்து "டான்" திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இத்திரைப்படத்தில் பிரபல குணசித்திர நடிகரும், பன்முக கலைஞருமான "சமுத்திரகனி" நடிக்க உள்ளார் என படக்குழு அறிவித்திருந்தது.சமுத்திரகனி இப்படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு ஒரு பக்க பலமாக அமையும் என ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் நடிகரான எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தில் "முண்டாசுப்பட்டி" என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற காமெடி "நடிகர் முனிஸ்காந்த்" நடிக்கவுள்ளார். இதனால் இத்திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படுகிறது.முனீஸ்காந்த் நடிப்பில் வெளியாகிய "மரகதநாணயம்" என்ற திரைப்படத்தில் இவரது காட்சிகள் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் சிரிப்பு மழையை கொடுத்தது.
சமீப காலமாக மக்களிடையே அதிகமாக பேசப்படும் "குக் வித் கோமாளியின் குழந்தை" என்று அழைக்கப்படும் "சிவாங்கி" டான் திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் "அனிருத்" இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் மற்றும் ஒரு வெற்றி படமாக டான் திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் இத்திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டது ரசிகர்களுக்கு இன்பத்தை அளித்துள்ளது."