மூன்று மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட தியேட்டர்: 3 சீட்டுக்களுக்கு ஒருவர் மட்டுமே அனுமதி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டதும், திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதும் தெரிந்ததே. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித தியேட்டர்களும் திறக்காததால் சினிமா ரசிகர்கள் நெட்பிளிக்ஸ் அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களை மட்டுமே சினிமா பார்க்க பயன்படுத்தி வந்தனர் இந்த நிலையில் சமீபத்தில் அரபு நாடுகளில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு அங்கு தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா பாதிப்பு அதிக இருக்கும் நாடுகளில் ஒன்றான இத்தாலியிலும்
 

மூன்று மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட தியேட்டர்: 3 சீட்டுக்களுக்கு ஒருவர் மட்டுமே அனுமதி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டதும், திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதும் தெரிந்ததே. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித தியேட்டர்களும் திறக்காததால் சினிமா ரசிகர்கள் நெட்பிளிக்ஸ் அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களை மட்டுமே சினிமா பார்க்க பயன்படுத்தி வந்தனர்

இந்த நிலையில் சமீபத்தில் அரபு நாடுகளில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு அங்கு தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா பாதிப்பு அதிக இருக்கும் நாடுகளில் ஒன்றான இத்தாலியிலும் தற்போது மூன்று மாதங்களுக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன

மேலும் திரைப்படம் பார்க்க வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மூன்று இருக்கைகளுக்கு ஒருவர் மட்டுமே உட்கார வேண்டும் என்றும் அதாவது ஒருவருக்கும் இன்னொருவருக்கும் இடையே இரண்டு இருக்கைகள் காலியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது

இருப்பினும் இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாலும் பொதுமக்கள் வேலை இழந்து வருமானம் இழந்து இருப்பதாலும் திரையரங்குகளில் கூட்டம் குறைவாகவே இருப்பதாகவும் ஆனால் வரும் நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web