அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு 

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் திரையரங்குகள் ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் மத்திய மாநில அரசுகளிடம் அவ்வப்போது கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அக்டோபர் 1ஆம் தேதி வெளியான அடுத்த கட்ட ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகளின்படி அக்டோபர் 15 முதல் திரையரங்கங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது 

இதனை அடுத்து திரையரங்குகளை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மத்திய அரசு திரையரங்குகள் திறப்பதற்கு உண்டான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

இதன்படி 50சதவிகித இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமரவைக்க செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் பார்வையாளர்கள் அனைவரையும் மாஸ்க் அணிய வலியுறுத்த வேண்டும் என்றும் திரையரங்குகளில் வாயிலில் சானிடைசர் வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் திரையரங்குகள் உள்ளே உணவு மற்றும் நொறுக்குத் தீனி வழங்க தடை செய்யப்படுவதாகவும் ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும் அந்த வழிகாட்டி நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விரைவில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் திரையரங்குகளில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web