தியேட்டர்கள் திறந்தும் கூட்டமில்லை: அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள்!

 

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நேற்று முதல் நாடு முழுவதும் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் நேற்று திரையரங்குகள் திறக்கப்பட்டன. குறிப்பாக டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் திரையரங்குகள் நேற்று 7 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது

இருப்பினும் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத காரணத்தினால் ஏற்கனவே ரிலீசான படங்கள் மட்டும்தான் திரையிடப்பட்டன. குறிப்பாக பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் பல திரையரங்குகள் திரையிடப்பட்டன. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்திருந்தது. ஆனால் அதற்கு வழியே இல்லாமல் 10% இருக்கைகள் கூட நேற்று நிரம்பாமல் தான் பெரும்பாலான திரையரங்குகளின் நிலைமை இருந்தது

டெல்லியில் உள்ள ஒரு திரையரங்கில் நான்கே நான்கு பேர் மட்டுமே படம் பார்க்க வந்ததால் திரையரங்கு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். ஓடிடி தளங்களில் அனைத்து திரைப்படங்களும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் உட்கார்ந்து குறைந்த செலவில் வீட்டில் உள்ள அனைவரும் படம் பார்த்துக் கொள்ளும் வசதியை அனுபவித்த பார்வையாளர்கள், திரையரங்குகளுக்கு வருவதை கிட்டத்தட்ட மறந்தே விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தமிழகத்திலும் திரையரங்குகள் திறந்தால் முன்புபோல் வசூல் வசூல் கிடைக்குமா என்பது சந்தேகம் இருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

From around the web