’மாஸ்டர்’ ரிலீஸ் குறித்த தகவலை மறுத்த திரையரங்கு உரிமையாளர்கள்: ரசிகர்கள் அதிர்ச்சி!

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இதுவரை ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் ஜனவரி 7ஆம் தேதி முதல் தொடங்கும் என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது. ஆனால் இந்த செய்தியை திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு மறுத்துள்ளது 

master

’மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்ட பின்னரே டிக்கெட் புக்கிங் தேதி முடிவு செய்யப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு கண்டிப்பாக வெளிவரும் என்ற நம்பிக்கையுடன் விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதும் அந்த எதிர்பார்ப்பை படக்குழுவினரும் ஏமாற்ற மாட்டார்கள் என்று கூறப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web