மீண்டும் தனுஷூடன் இணையும் வெற்றிமாறன்? சூர்யா, சூரி படங்கள் என்ன ஆச்சு?

 
மீண்டும் தனுஷூடன் இணையும் வெற்றிமாறன்? சூர்யா, சூரி படங்கள் என்ன ஆச்சு?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் சூரி நடிக்கும் ஒரு படத்தையும், சூர்யா நடிக்கும் வாடிவாசல் என்ற படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளார் 

ஆனால் சூரி நடிக்கும் படம் கால தாமதம் ஆவது போல் தெரிகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அதேபோல் சூர்யாவின் அடுத்த படத்தை பாண்டியராஜன் இயக்க உள்ளதால் அந்த படத்தை முடித்துவிட்டுதான் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது 

vetrimaran

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகவும் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் மிக விரைவில் தொடங்க உள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது 

ஏற்கனவே தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்த பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, மற்றும் அசுரன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணையவிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web