விவாகரத்தான நடிகரை விருந்துக்கு கூப்பிட்ட மனைவி! 

 

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்த பிரபல நடிகரை தனது பிறந்த நாள் விருந்துக்கு அவரது முன்னாள் மனைவி அழைப்பு விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவர் கடந்த 2000ம் ஆண்டு சுசானா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் 

இந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சுசானா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் உள்ள அவரது வீட்டில் நடந்த இந்த பிறந்தநாள் விழாவிற்கு அவர் தனது முன்னாள் கணவர் ஹிருத்திக்கு அழைப்பு விடுத்திருந்தார் 

தனது மகன்களின் வேண்டுகோள் காரணமாகவே அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முன்னாள் மனைவியின் அழைப்பை ஏற்று ஹிரித்திக் ரோஷன் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதாகவும், பிறந்த விழாவுக்கு பின்னர் அவர் விருந்திலும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 

ஏற்கனவே கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் சுசானாவும் அவரது குழந்தைகளும் ஒரு சில மாதங்கள் ஹிர்த்திக் ரோஷன் வீட்டில்தான் தங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விவாகரத்து ஆன தம்பதிகள் மீண்டும் நெருக்கமாகி வருவது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web