தமிழில் இருந்து இந்திக்கு சென்று மீண்டும் தமிழுக்கு வரும் கதை: பரபரப்பு தகவல்

தமிழில் இருந்து இந்திக்கு சென்ற ஒரு திரைப்படத்தின் கதை மீண்டும் ரீமேக் மூலம் தமிழுக்கு வர உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

 

தமிழில் இருந்து இந்திக்கு சென்ற ஒரு திரைப்படத்தின் கதை மீண்டும் ரீமேக் மூலம் தமிழுக்கு வர உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

நடிகரும் எழுத்தாளருமான நந்தா பெரியசாமி எழுதிய கதையில் டாப்ஸி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் ஹிந்தியில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்து விட்டது என்பதும் தெரிந்ததே 

’ராஷ்மி ராக்கெட்’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் கதையை மட்டும் நந்தா பெரியசாமியிடம் வாங்கி அதன் பின்னர் அதில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்தி இந்தியில் தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது 

நந்தா பெரியசாமியிடம் இந்த கதையை வாங்காமல் ’ராஷ்மி ராக்கெட்’ தயாரிப்பாளரிடம் இந்த கதையை வாங்கத பேச்சுவார்த்தையை தெலுங்கு பட நிறுவனம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழில் ரீமேக் செய்யவும் ஒரு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எனவே தமிழ் கதாசிரியரிடம் இருந்து இந்திக்கு சென்ற ஒரு திரைப்படத்தின் கதை மீண்டும் தமிழுக்கு ரீமேக் செய்ய இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web