பிக் பாஸ் வீட்டை தூங்க வைத்த கவினின் கதை!!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய 37ஆவது எபிசோடில் போட்டியாளர்களுக்கு போடு ஆட்டம் போடு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது, போட்டியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உடைகளை அணிந்து கொண்டு, அவர்களது பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். இந்த டாஸ்க்கை ஒரு வழியாக அனைவரும் செய்து முடித்தனர். போடு ஆட்டம் போடு டாஸ்க்குடன் வேறொரு டாஸ்க்கையும் போட்டியாளர்களுக்கு வழங்கினார் பிக்பாஸ். அதில், அனைத்து ஹவுஸ்மேட்ஸும் மற்ற போட்டியாளர்களிடம் கேட்க விரும்பு கேள்விகளை தொகுக்கக்
 

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய 37ஆவது எபிசோடில் போட்டியாளர்களுக்கு போடு ஆட்டம் போடு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதாவது, போட்டியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உடைகளை அணிந்து கொண்டு, அவர்களது பாடலுக்கு நடனம் ஆட வேண்டும்.  இந்த டாஸ்க்கை ஒரு வழியாக அனைவரும் செய்து முடித்தனர்.

போடு ஆட்டம் போடு டாஸ்க்குடன் வேறொரு டாஸ்க்கையும் போட்டியாளர்களுக்கு வழங்கினார் பிக்பாஸ்.

பிக் பாஸ் வீட்டை தூங்க வைத்த கவினின் கதை!!

அதில், அனைத்து ஹவுஸ்மேட்ஸும் மற்ற போட்டியாளர்களிடம் கேட்க விரும்பு கேள்விகளை தொகுக்கக் கேட்டார். பிறகு ஒவ்வொரு போட்டியாளர்களையும் சந்தித்து அவர்களிடம் தனித்தனியே கேள்விகளை கேட்டார். 

சந்திப்பு கூடத்தில் இந்த டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் கவினிடம், சாக்‌ஷி உங்களுக்கு யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்காக அவர் ஒட்டுமொத்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அதுவரை நடந்த, அந்த தருணங்களில் சாக்‌ஷியுடன் இருந்த அனைத்து சூழல்களையும் கதையாக வாசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பல போட்டியாளர்கள் தூங்கிவிட்டனர். அவர் பேசி முடித்ததும் அந்த போட்டியாளர்கள் உறக்கத்தில் இருந்து விழித்தனர். அனைவரையும் தூங்க வைக்கும் அளவு அவர் கதை இருந்ததாக பார்வையாளர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web