இரு மகள்களின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நட்சத்திர ஜோடி!

இரட்டை மகள்களின் இரண்டாவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார் பிரஜன். 

 

தமிழ் சினிமாவில் வெற்றிநடைபோட்டு வரும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அடுத்தடுத்து சீரியல்கள் கமிட்டாகி அதில் வெற்றியும் கண்டு வருகிறார் பிரஜன்.

தொகுப்பாளராக இருந்த இவர் பின் சின்னத்திரையில் கலக்கி வந்தார். இடையில் திருமணம் நடக்க படங்களில் வாய்ப்புகள் தேடி வந்தார். ஆனால் அவருக்கான சரியான படம் எதுவும் வராததால் மீண்டும் சின்னத்திரை பக்கமே திரும்பினார். அப்போது அவருக்கு கிடைத்த சீரியல் சின்னதம்பி, இந்த சீரியலுக்காக விஜய் தொலைக்காட்சியில் பல விருதுகள் பெற்றார்.

இந்த சீரியல் முடிய பிரஜன் அடுத்து அன்புடன் குஷி என்ற சீரியலில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். இந்த நிலையில் தனது இரட்டை மகள்களின் இரண்டாவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இருவரும் தங்களது குழந்தைகளை வைத்து நடனம் ஆடிய வீடியோ

From around the web