அட 6 மணிக்கு வெளியாக உள்ளது "அவளோ அவளோ" என்ற பாடல்...,

நடிகர் பாபி சிம்ஹா நடித்துள்ள திரைப்படத்தின் பாடல் 6 மணிக்கு வெளியாக உள்ளது...,
 
நடிகர் பாபி சிம்ஹாவின் ட்விட்டர் பக்கம் கூறும் கருத்து...,

 "குணச்சித்திர நடிகர்", "கதாநாயகன்"," துணை நடிகர்" இப்படிப் பல்வேறு முகங்களைக் கொண்டவர் "நடிகர் பாபி சிம்ஹா". நடிகர் பாபி சிம்ஹா "கோ 2", "திருட்டுப்பயலே 2" போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக தோன்றியிருந்தார்.நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகி இருந்த "ஜிகர்தண்டா" என்ற திரைப்படம் இவருக்கு ஒரு மிகுந்த ஒரு வெற்றியை கொடுத்தது. மேலும் நடிகர் ஆர்யாவுடன் "பெங்களூர் நாட்கள்" என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

bobby simha

"மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படும் நடிகர் நடிகர் விஜய் சேதுபதியுடன் "சூது கவ்வும்"  "கருப்பன்" போன்ற திரைப்படங்களில்  நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகர் பாபி சிம்ஹா, "சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் "பேட்ட" என்ற வெற்றி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நடிகர் விக்ரமுடன் "சாமி 2" என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு வில்லனாக தோன்றி அசரவைத்திருப்பார். மேலும் இவர் நடிகை  கீர்த்தி சுரேஷுடன் "பாம்பு சட்டை" என்ற படத்திலும் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிப்பில் உருவாகி வெளியாக உள்ள திரைப்படம் "வசந்த முல்லை". இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக "சிவப்பு மஞ்சள் பச்சை" படத்தின்  நாயகியான "கஷ்மிரா பரதேசி" நடித்துள்ளார். தற்போது இத்திரைப்படத்தில் "அவளோஅவளோ" என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என நடிகர் பாபி சிம்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இதனால் இவரது ரசிகர்கள் இப்பாடலுக்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

From around the web