அனைவரையும் நெகிழ வைத்த "எஸ் கே"!

"கலைமாமணி" விருது பெற்ற சிவகார்த்திகேயன் செய்த நெகிழ வைத்த சம்பவம்!
 
வாழ்த்துக்கள் மழையில் குளிக்கும் "கலைமாமணி" விருது பெற்ற பிரபல நடிகர்!

தனது நடிப்பாலும், தனது காமெடி திறனாலும் இன்று மிக பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் பிரபல நடிகர் "சிவகார்த்திகேயன்". இவர் ஆரம்ப காலங்களில் காமெடியனாக தோன்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்த இவர் இன்று தமிழ் சினிமாவின் நீக்கமுடியாத மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டுள்ளார் என்பது இவரது முயற்சிக்கு கிடைத்த  வெற்றிதான்.

siva karthikeyan

இவர் நடிப்பில் வெளியாகிய "கேடி பில்லா கில்லாடி ரங்கா" திரைப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் இவருடன் "நடிகர் விமல்"," நடிகர் சூரி" மற்றும் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். இத்திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் "எதிர்நீச்சல்", "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" போன்ற தொடர்ச்சியான பிளாக்பஸ்டர்  வெற்றி கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார். குறிப்பாக குழந்தை ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார்

தற்போது "கலைமாமணி" விருது பெற்ற இவர் தனது தாயாரை சந்தித்து அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அது இணையதளத்தில் வைரலாக பரவியது. மேலும் கலைமாமணி விருது பெற்ற இவர் "தாய்க்கு நல்லதொரு பிள்ளை" என்ற பெயரையும் சேர்த்து பெற்றார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். மேலும் பல பிரபலங்களும் ,பல நட்சத்திரங்களும் இவரை வாழ்த்துக்கள் கூறிக் கொண்டுள்ளனர். இதனால்  நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி மழையில் நனைகிறார்.

From around the web