அவர் வழியில் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் சிங்கப்பெண்!

இளைஞர்கள் அனைவரும் நடிகர் விவேக்கின் வழியில் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார் நடிகை இந்துஜா!
 
அவர் வழியில் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் சிங்கப்பெண்!

காமெடியால் மக்கள் மத்தியில் சமூக சீர்திருத்தவாதியாக காணப்படுகிறார் நடிகர் விவேக். மேலும் இவரது படத்தில் உள்ள ஒவ்வொரு காமெடி எங்கேயாவது கருத்து இல்லாமல் இருக்காது அந்த அளவிற்கு தனது காமெடியை விட கருத்தினை முக்கியமாக கொண்டு தன் வாழ்நாளில் நடித்த படங்கள் அனைத்திலும் பின்பற்றியிருந்தார் நடிகர் விவேக். மேலும் இவர் சமூக ஆர்வலராகவும் இருந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vivek

நடிகர் விவேக் நேற்றையதினம் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து தமிழ் திரையுலகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக திரையுலக செய்யும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளார். மேலும் அவரின் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

 தொடர்ந்து சக நடிகர்கள் இயக்குனர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி பேட்டியளித்தனர்.  தற்போது அவருடன் பிகில் படத்தில் பணியாற்றிய சிங்கப் பெண்ணாக வலம் வந்த நடிகை இந்துஜா அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன்படி அவர் இளைஞர்கள் அனைவரும் நடிகர் விவேக்கின் வழியில் நடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.மேலும் அவர் ஐயா அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற மரங்களை நட்டு வந்தார். அதேபோன்று நாமளும் மரங்களை நட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் அவரின் கூறிய எல்லாவற்றையும் மனதில் வைத்து அதை வந்து நாம் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

From around the web