சிம்புவின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: இயக்குனர் யார்?

 

சிம்பு நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’போடா போடி’. இந்த படம் விக்னேஷ் சிவனுக்கு முதல் படம் என்பதும் வரலட்சுமிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என கடந்த சில மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் வெளிவந்துள்ளது 

சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள ’போடா போடி 2’ படம் வரும் 2021 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் நாயகியாக ரித்திகா பால் என்ற புதுமுக நடிகை அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 

poda podi2

இந்த படத்தை இயக்குவதற்கு இரண்டு இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் ’போடா போடி’ படத்தை தயாரித்த குமார் என்பவர் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் ’போடா போடி 2’ படத்தின் கதை முழுக்க முழுக்க வித்தியாசமானது என்றும் முதல் பாகம் போலவே இந்தப் படமும் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 

சிம்பு ஏற்கனவே ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்த நிலையில் தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், அவர் பாலா உள்பட பல இயக்குனர்களின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web