கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு ....!

25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் நீங்க முடியாத நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அருண் விஜய் .இவர் நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். இவரின் நடிப்பில் வெளியாகிய "பாண்டவர்பூமி" இவருக்கு ரசிகர்களை தந்தது. பின்னர் இவரது நடிப்பில் வெளியாகிய மாஞ்சாவேலு, மலை மலை போன்ற படங்களுக்கு பின்னர் ஒரு நீண்ட கால இடைவெளியை எடுத்துக் கொண்டார்.

பின்னர் 2015ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "அல்டிமேட் ஸ்டார்" அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் படத்தில் இவர் நடிகர் அஜித்குமாருக்கு வில்லனாக நடித்திருந்தார் . இத்திரைப்படம் இவரது நடிப்பிற்கும், திறமைக்கும் கிடைத்த பரிசாகவே அமைந்தது. பின்னர் இவர் நடிப்பில் வெளியாகிய தடம், குற்றம் 23 போன்ற திரைப்படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும், ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கியது.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய "செக்க சிவந்த வானம்" திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுத்தந்தது. சினிமா துறையில் 25 ஆண்டை கடந்த இவருக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணமாக உள்ளது. இவரது ட்விட்டர் பக்கம் வாழ்த்துக்களால் நிறைந்து காணப்படுகிறது.
Thank you...🙏 https://t.co/SvpBThC9cw
— ArunVijay (@arunvijayno1) February 4, 2021
Thanq bro...🙏 https://t.co/e8zMn2mTlp
— ArunVijay (@arunvijayno1) February 4, 2021