அடுத்து என்ன நடக்கப்போவுதுன்னு தெரிஞ்சவன் சைலண்டாதான் இருப்பான்: ‘ஈஸ்வரன்’ டீசர்!

 

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ டீசர், ஏற்கனவே அறிவித்தபடி இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 4.32 மணிக்கு ரிலீஸாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்புவை பார்ப்பதற்கு உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கின்றது. ஸ்லிம் உடல், முகத்தில் தேஜஸ், சுறுசுறுப்பு, நடையில் ஸ்டைல் என அசத்துகிறார். வசனம் பேசுவதை மட்டும் கொஞ்சம் அலட்டல் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

கிரிக்கெட் பேட்டை கையில் வைத்து கொண்டு ஒரு பெரிய கும்பிடோடு அறிமுக் காட்சி சூப்பர். சூப்பர் ஸ்டாருக்கு முயற்சி செய்கிறார். 

teaser easwaran1

‘கடவுளை சிரிக்க வைக்கணும்ன்னா என்ன பண்ணனும் தெரியுமா? நம்மோட பிளான சொன்னாலே போதும் விழுந்து விழுந்து சிரிப்பாரு’ என்ற வசனமும், அடுத்து என்ன நடக்கப்போவுதுன்னு தெரிஞ்சவன் சைலண்டாதான் இருப்பான் என்ற பஞ்ச் வசனமும் மனதை கவர்கின்றன.

நிதி அகர்வால் வழக்கமான ஒரு ஹீரோயினாக இருப்பார் என தெரிகிறது. பாரதிராஜாவை இயக்குனர் நன்றாக இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளார் என்பது டீசரில் இருந்தே தெரிய வருகிறது. ஆக்சன் காட்சிகள் அமர்க்களம். எஸ்.தமனின் பின்னணி இசையும் பிரமாதம். மொத்தத்தில் சிம்புவுக்கு ஒரு மாஸ் ரீஎண்ட்ரி தான் இந்த ‘ஈஸ்வரன்’

From around the web