பாலாஜி பெஸ்ட்டுன்னு சொன்னவர் ஜெயிலுக்கு போயிட்டாரே!

 

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஈடுபாடு இல்லாத போட்டியாளர்கள் இருவரும், சிறப்பாக செயல்பட்ட இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு. அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில் சிறப்பாக செயல்பட்டவர்கள் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது புரமோவில் ஈடுபாடு இல்லாதவர்கள் யார் யார் என்பது குறித்த நாமினேசன் செய்யப்பட்டது

இதில் இறுதியாக கேபி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் புரமோவில் ஷிவானி சிறப்பாக செயல்பட்டதாக பாலாஜி கூறிய நிலையில், அவர் கூறிய ஷிவானி தான் தற்போது மோசமாக செயல்பட்டவர் என்றும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

shivani jail

இதனை அடுத்து பிக்பாஸ் உத்தரவுபடி கேப்டன் ரம்யா, கேபி மற்றும் ஷிவானி ஆகிய இருவரையும் சிறையில் அடைத்தார். சிறைக்குச் செல்லும்போது சற்றே கோபத்துடன் ’நாமினேஷன் ஓகே தான் ஆனால் அதற்கு கூறிய காரணங்கள் ஏற்புடையது இல்லை’ என்றும் ஷிவானி கூறிவிட்டுச் சென்றது பெரும் பரப்பை ஏற்படுத்தியது 

இந்த மாதம் இந்த வாரம் முழுவதுமே ஆரி மீது அர்ச்சனா குரூப்பில் உள்ளவர்களும் ரம்யா உள்ளிட்டவர்களும் செம கடுப்பில் இருந்தனர். ஆனால் ஆரி எப்படி மோசமான போட்டியாளர் என்ற நாமினேஷனில் இருந்து தப்பித்தார் என்பது புரியவில்லை

மொத்தத்தில் இதுவரை அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி விளையாடிக்கொண்டிருந்த ஷிவானியை முதல்முறையாக ஹவுஸ்மேட்ஸ்கள் சேர்ந்து சிறையில் அடைத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web