மக்களை சிரிக்க வைத்தவர் இன்று அழ வைத்திருக்கிறார்!மக்கள் அலையில் மிதந்து செல்லும் அவரின் உடல்!

78 குண்டுகள் முழங்க தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
 
மக்களை சிரிக்க வைத்தவர் இன்று அழ வைத்திருக்கிறார்!மக்கள் அலையில் மிதந்து செல்லும் அவரின் உடல்!

தற்போது உள்ள காமெடியர்களில் எப்படியாவது மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள். ஆனால் மக்களுக்கு சிரிக்க வைப்பதோடு சிந்திக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது காமெடியில் கலக்கிக் கொண்டிருந்தவர் நடிகர் விவேக். மேலும் அவரின் காமெடி ஒவ்வொன்றும் சமூக கருத்தோடு காணப்படும். அவர் பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைவரும் சகஜமாக நடிக்கும் இயல்பு கொண்டவர். மேலும் சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறையும் கொண்டவர்.

vivek

இத்தகைய சிறப்பு வாய்ந்த நடிகர் விவேக் நேற்றைய தினம் மாரடைப்பால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அவருக்கு அஞ்சலி செலுத்த பல பிரபலங்கள் அவரது வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். தற்போது அவரது உடல் தகனம் வீட்டிலிருந்து வெளியே செல்லப்படுகிறது. மேலும் இதில் ஏராளமான பிரபலங்கள் உள்ளனர்

 மேலும் மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர் விவேக் தற்போது இன்று மக்களை அழ வைத்திருக்கிறார். மேலும் அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரின் உடலுக்கு காவல்துறையினர் மரியாதையுடன் இறுதி சடங்கு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க அவர்களை சமூக சேவையை கௌரவிக்க காவல்துறை மரியாதை செய்கிறது. மேலும் காவல் துறை அனுமதியுடன் விவேக்கின் உடலை அரசு தகனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும் 78 துப்பாக்கி குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறையை மரியாதை அளிக்கப்படுகிறது.

From around the web