20 குடும்பங்களை பிழைக்க வைத்தவர்! தற்போது விடைபெற்றார்!

நடிகர் லட்சுமணன் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்தார்!
 
20 குடும்பங்களை பிழைக்க வைத்தவர்! தற்போது விடைபெற்றார்!

பணம் இருந்தால் போதும் என்ற காலத்திலும் நல்லதொரு குணத்தோடு ஒரு சிலர் உள்ளனர். மேலும் சினிமாத் துறையிலும் ஒரு சிலர் நல்லதொரு குணத்தோடு வாழ்ந்து வருகின்றனர் என்பதும் அவ்வப்போது தெரிய வருகிறது. அதன் மத்தியில் தனது வாழ்நாள் முழுவதும் சினிமாக்களில் நல்லதொரு கருத்துக்களை கூறி பல்வேறு உதவிகளை செய்து வந்தவர் நடிகர் விவேக். விவேக் நடித்த ஒவ்வொரு படத்திலும் காமெடி கலந்த சமூக கருத்துக்கள் காணப்படும். அத்தகைய நடிகர் விவேக் சினிமா மட்டுமின்றி சுற்றுச்சூழல் மிகவும் அக்கறை கொண்டவர்.

vivek

மேலும் அவர் தமிழகத்தில் லட்சக்கணக்கான மரங்களை கட்டியவர் என்ற பெயருக்கு உரியவர். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மரணமடைந்து மக்கள் அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்தார். மேலும் அவருக்காக சினிமாத்துறையினர் பலரும் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரின் இறுதி ஊர்வலம் ஆனது தற்போது தொடங்கியுள்ளது. அதற்காக ரசிகர்கள் சினிமாத்துறையினர் என பலரும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.

 சக நடிகர் ஒருவர் அவருக்கு மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தி அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன்படி அவர் நடிகர் விவேக் நடிகரை விட ஒரு நல்ல மனிதர். மேலும் 20 குடும்பங்கள் பிழைக்க வைக்கிறார் என்றும் அவர் கூறினார். மேலும் அவர் உதவியா? பிரச்சனையா? என்று கேட்கும் இயல்புடையவர் என்றும் அவர் கூறினார். மேலும் அவர் பல்வேறு சிறு நடிகர்களின் குழந்தைகளின் படிப்பு செலவுகளையும் மேற்கொண்டு வருகிறார் என்பது வெளியே தெரியாது என்றும் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

From around the web