முதல்வரை விஜய் சந்தித்த அடுத்த நாளே ‘மாஸ்டர்’ படக்குழுவினர் அதிரடி அறிவிப்பு!

 

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜனவரி 13-ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவது உறுதி என்று சற்று முன்னர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்திருந்தார் 

இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விஜய் நேரில் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது 

master

இந்த நிலையில் தமிழக முதல்வரை விஜய் சந்தித்த அடுத்த நாளே ‘மாஸ்டர்’ படம் குறித்த அதிரடி அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. ‘மாஸ்டர்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை மதியம் முப்பது 12.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது 

நாளை ‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்புக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் ட்ரெய்லரில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இருக்கும் என்றும் மாஸ்டர் பட வட்டாரங்கள் கூறுகின்றன


 

From around the web