சூப்பர் சிங்கர் செட்டிற்கு வந்த மாஸ்டர்....

மாஸ்டர் படத்தின் சிறைகாட்சியில் கபடி விளையாடும் போது வரும் பாடல் இசை போல ஒலிக்கப்பட்டுள்ளது
 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் பலருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சி என கூறினால் மிகையல்ல. இளம் தலைமுறையில் நிறைய பேர் பார்க்கக்கூடியதாகவும் இசை பிரியர்கள் ரசிக்கக்கூடியதாகவும் அமைந்துள்ள இந்நிகழ்ச்சி சீசன் 8 ஐ தொட்டுள்ளது.

அண்மையில் கோலாகலமாக இந்நிகழ்ச்சியின் தொடங்கியது. முதல் சுற்றும் முடிவடைந்துவிட்டது. மா.கா.பா மற்றும் பிரியங்கா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். முதல் சுற்று நிகழ்ச்சியிலேயே ஆதித்யா கிருஷ்ணன் மற்றும் சிலர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் ஈர்ப்பை பெற்றுவிட்டனர்.

தற்போது இந்த நிகழ்ச்சிக்கு மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். அதிலும் மாஸ்டர் படத்தின் சிறைகாட்சியில் கபடி விளையாடும் போது வரும் பாடல் இசை போல ஒலிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளித்துள்ளது.


 


 

From around the web