சந்தானம் நடிக்கும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் முக்கிய அப்டேட்

 

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த சமீபத்திய படங்கள் நல்ல ஹிட்டாகி நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ’பாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது

சந்தானம் நடிப்பில் ஜான்சன் என்பவர் இயக்கி வந்த திரைப்படம் ’பாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வைரலானது என்பது தெரிந்ததே 

parris jayaraj audio

இந்த நிலையில் ’பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் பாடல்கள் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சந்தானம் ,அனைகா சோட்டி, மொட்ட ராஜேந்திரன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆர்துர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை கே.குமார் என்பவர் தயாரித்துள்ளார்


 

From around the web