‘அரண்மனை 3’ படத்தின் அட்டகாசமான மோஷன் போஸ்டர்!

 
‘அரண்மனை 3’ படத்தின் அட்டகாசமான மோஷன் போஸ்டர்!

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வந்த ‘அரண்மனை 3’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும், சுந்தர் சி, ஆர்யா, குஷ்பூ, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, சம்பத்ராஜ், மனோபாலா உள்ளிட்டவர்களின் டுவிட்டர் பக்கங்களில் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

aranmanai 3

ஏற்கனவே அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது அரண்மனை 3 திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படமும் நல்ல வெற்றியை பெறும் என்றும் கூறப்படுகிறது.


இந்த படத்தில் சுந்தர் சி மற்றும் ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்க ராஷிகன்னா மற்றும் ஆண்ட்ரியா நாயகிகளாக நடித்து வருகின்றனர். மேலும் சாக்ஷி அகர்வால், கோவைசரளா, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மே மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர்களிடமிருந்து செய்தி கசிந்துள்ளது

From around the web