ஒரே நாளில் 28 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த முன்னணி நிறுவனம்

 

உலகின் முன்னணி பொழுதுபோக்கு துறை நிறுவனமான டிஸ்னி நிறுவனம் திடீரென 28 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படாததால் முழுமையாக அதன் வருமானம் முடங்கி உள்ளது 

இதனால் கடும் நெருக்கடியைச் சந்தித்த பொழுது போக்கு துறையின் ஜாம்பவான் நிறுவனமான டிஸ்னி நிறுவனம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்கா பிரிவு தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் ’கனத்த இதயத்துடன் 28,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்து உள்ளார் 

திடீரென 28,000 ஊழியர்கள் பணியை இழந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரம் என்ன என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் வேறுவழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது 

உலகின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு நிறுவனமான நெஸ்லே நிறுவனத்திற்கே இந்த நிலை என்றால் மற்ற நிறுவனங்களின் நிலை குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது 

From around the web