அனிதாவுக்கு கடைசி நாளும் டோஸ் தான்: வறுத்தெடுத்த கமல்ஹாசன்!

 

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று அனிதாதான் வெளியே செல்லப் போகிறார் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் சற்று முன் இன்றைய இரண்டாவது புரோமோ விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ளது 

அதில் கடலைப்பருப்பு விவகாரம் குறித்து கமல் மற்றும் அனிதா பேசுகின்றனர். பாலாஜி இதுகுறித்து கூறிய போது கடலைப்பருப்பு விவகாரத்தில் அனிதா தவறு செய்துவிட்டார் என்றும் அந்த தவறை அவர் மன்னிப்பு கேட்டு திருத்தி கொண்டிருக்கலாம் என்றும் ஆனால் பிடிவாதமாக அவர் இருந்தது தான் எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார்

anitha

இதுகுறித்து அனிதா விளக்கமளிக்க போது சாம்பாருக்கு என தவறுதலாக ஊறவைத்த கடலைப்பருப்பை வடை அல்லது கூட்டு செய்யலாம் என்றுதான் திட்டமிட்டிருந்ததாக கூறிய போது ’உங்களுக்கு அதெல்லாம் செய்ய வருமா’ என கமல்ஹாசன் பதிலடியாக கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மேலும் அனிதாவுக்கு இந்த வாரம் அதிக டோஸ்கள் இருந்ததாகவும் வெளியேறும் வாரத்தில் கூட அவரை கடுமையாக டோஸ்விட்டுத்தான் கமல்ஹாசன் வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது


 

From around the web