பத்திரப்பதிவுக்கான டோக்கனை இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம்: அதிரடி அறிவிப்பு

பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனையே இ – பாஸாக பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். பத்திரப்பதிவுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரை, பதிவு செய்யப்போகும் ஆவணத்தை ஆதாரமாக கொண்டு அனுமதிக்க வேண்டும் என்றும், மாவட்டத்தை விட்டு வெளியேறும்போது பத்திரம் பதிவு செய்ததற்கான ஆவணத்தை ஆதாரமாக காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பத்திரப்பதிவிற்கான டோக்கன் மற்றும் ஆவணங்களை காண்பிப்போரை மாவட்டங்கள் இடையே பயணிக்க
 
பத்திரப்பதிவுக்கான டோக்கனை இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம்: அதிரடி அறிவிப்பு

பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனையே இ – பாஸாக பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார்.

பத்திரப்பதிவுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரை, பதிவு செய்யப்போகும் ஆவணத்தை ஆதாரமாக கொண்டு அனுமதிக்க வேண்டும் என்றும், மாவட்டத்தை விட்டு வெளியேறும்போது பத்திரம் பதிவு செய்ததற்கான ஆவணத்தை ஆதாரமாக காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பத்திரப்பதிவிற்கான டோக்கன் மற்றும் ஆவணங்களை காண்பிப்போரை மாவட்டங்கள் இடையே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இபாஸ் வழங்கப்படுவதில் பல்வேறு சிக்கல் இருந்து வரும் நிலையில் பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு அதன் டோக்கனையே இபாஸ் ஆகவும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

From around the web