தளபதி 65 படத்தின் நாயகி தயார்: ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் 

 

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தளபதி 65’

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சுறுசுறுப்பாக செய்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் வழக்கம்போல் ரொமான்ஸ் காட்சிகளும் இருக்கும் என்றும் இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் விஜய்யின் நாயகியாக நடிக்க 3 நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது 

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த பிகில் படத்தில் தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பதும் கடைசி நேரத்தில் திடீரென நயன்தாரா அந்த கேரக்டரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் ராஷ்மிகா மந்தனா கார்த்தி நடிக்கும் சுல்தான் என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web