மாமா தொடங்கி மருமகன் வரை நடித்த நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்!

நடிகர் விவேக்கின் உடல் நிலையில் முன்னேற்றம் குறித்து 24 மணி நேரத்திற்கு பின்னரே தெரிய வரும்!
 
மாமா தொடங்கி மருமகன் வரை நடித்த நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்!

தனது நடிப்பாலும் தனது காமெடி திறனாலும்  விடாமுயற்சியாலும் இன்று மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். சூப்பர் ஸ்டார் தொடங்கி அவரது மருமகனான தனுஷ் வரைக்கும் பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூப்பர் ஸ்டாருடன் அவர் நடித்த சிவாஜி என்ற படத்தின் வெற்றிக்கு இவரது காமெடியே பக்கபலமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விஜயுடன் இவர் குஷி பத்ரி என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vivek

மேலும் தல அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுசுடன் இவர் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.  அவர் நேற்றைய தினம் ஆட்கொல்லி நோயான கொரோனாக்கு எதிராக தடுப்பூசி போட்டிருந்தார். இந்நிலையில் இன்று  மத்திய நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை பற்றி மருத்துவ நிபுணர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

அதன்படி நடிகர் விவேக் சுயநினைவு இல்லாத நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு வந்தவுடன் உடனடியாக இருதய சிகிச்சை நிபுணர்கள் அவசர முதலுதவி சிகிச்சை அளித்தனர் என்றும் கூறுகின்றனர். மேலும் விவேக்குக்கு அவசரமாக ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்ட் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது. மேலும் தற்போது வரை அவரது உடல் கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவரின் உடலின் முன்னேற்றம் குறித்து 24 மணி நேரத்திற்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.மேலும் நடிகர் விவேக்குக்கு எக்மோ கருவி உதவியுடன் தொடர் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

From around the web