சிகப்பு பந்தை அடுத்து கோல்டன் பந்து: திடீரென மாறிய டாஸ்க்!

 

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக பந்து டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இதில் சிவப்பு பந்தை பிடித்தால் அவர்கள் எடுத்துள்ள மதிப்பெண் அனைத்தும் ஜீரோ ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 

நேற்று முன்தினம் பாலாஜி சிகப்பு பந்தை பிடித்ததால் அவர் அணியில் உள்ள மதிப்பெண்கள் ஜீரோ ஆகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சிகப்பு பந்தை அடுத்து கோல்டன் பந்து பைப் வழியாக வர உள்ளது 

gabii

இந்த கோல்டன் பந்தை பிடிப்பவர்களுக்கு ஒரு சிறப்பு சக்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி கோல்டன் பந்துகளைப் பிடிக்க போட்டியாளர்கள் தீவிர முயற்சி செய்தனர். பாலாஜி, ரம்யா, கேபி உள்பட ஒரு சிலர் இந்த கோல்டன் பந்தை பிடித்தனர். ரியோ, ஆஜித் உள்பட ஒரு சிலர் இந்த கோல்டன் பந்தை மிஸ் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 


இந்த நிலையில் கோல்டன் பந்தை பிடித்தவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சக்திகளின் அடிப்படை பாலாஜி தனக்கு நெருக்கமான போட்டியாளர் ஒருவருக்கு 100 மதிப்பெண்கள் அதிகமாக வழங்கினார். மேலும் ரம்யா தனக்கு வழங்கப்பட்ட சக்தியை பயன்படுத்தி ரியோவின் மதிப்பெண்களை ஜீரோவாக்கினார். இதற்கு பதிலடியாக பாலாஜியின் மதிப்பெண்களை கேபி ஜீரோவாக்கினார். இதனால் தற்போது பந்து டாஸ்க்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த டாச்க்கிலும் பாலாஜி மற்றும் ரியோ வெளிப்படையாகவே குரூப்பாக விளையாடுவது தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது  பொங்கல்

From around the web