‘வாத்தி கம்மிங்’ ஆட்டத்துடன் ஆரம்பித்த முதல் நாள்: பிக்பாஸ் அப்டேட்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டாலே விஜய் டிவியில் தினமும் மூன்று புரமோ வீடியோக்கள் வெளியாகி அந்த வீடியோக்களே நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் இருக்கும் என்பது தெரிந்ததே 

அந்த வகையில் இன்று முதல் நாள் புரோமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. அதில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இந்த பாடலுக்கு ஏற்ப போட்டியாளர்கள் அட்டகாசமாக டான்ஸ் ஆடுகின்றனர் 

கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சியுடன் முதல்நாள் நிகழ்ச்சியை ஆரம்பிக்கின்றனர். இதில் ஷிவானி நாராயணன், சனம் செட்டி, கேப்ரில்லாவின் ஆட்டம் மாஸ் ஆக இருந்ததாக கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்


 

From around the web