தீபாவளி, நியூ இயர், பொங்கல் கொண்டாடும் முதல் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரம் வரை நடைபெற்றது. எனவே இந்த நிகழ்ச்சிகளில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எந்த பண்டிகையும் வராது என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதமாக தொடங்கப்பட்டது. அதாவது அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கப்பட்டு உள்ளது. எனவே இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 17ஆம் தேதி வரை 105 நாட்கள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இதனை அடுத்து தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் ஆகிய மூன்றையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் கொண்டாடும் வாய்ப்பை பெறுகின்றனர். ஜனவரி 17-ஆம் தேதி வரை 100 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் போட்டியாளர்கள் மட்டுமே பொங்கல் தினத்தை கொண்டாட முடியும் என்றாலும் பெரும்பாலான போட்டியாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட வாய்ப்பு உள்ளது என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web