தனது பிறந்தநாளுக்கு செம ட்ரீட் கொடுக்க போகிறார் பிரபல நடிகர்!

"அயலான்" படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது!
 
பிப்ரவரி 17ஆம் தேதி   "அயலான்"படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும்!

சின்னத்திரை தொடங்கி இப்பொழுது வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் "நடிகர் சிவகார்த்திகேயன்". ஆரம்ப காலத்தில் காமெடியனாக சின்னத் திரையில் வலம் வந்து பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வந்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் நீங்க முடியாத ஜாம்பவானாக ஜொலித்துக் கொண்டுள்ளார். இவரின் நடிப்பில் வெளியாகிய "கேடி பில்லா கில்லாடி ரங்கா"," எதிர்நீச்சல்"," வருத்தப்படாத வாலிபர் சங்கம்" ஆகிய மூன்று படங்களும் தொடர்ந்து இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனால் இவர் ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார்.

siva karthikeyan

தற்போது இவர் "டாக்டர் "என்ற படத்தில் நடித்துள்ளார்.இத்திரைப்படம் சில நாட்களில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்த நிலையில், அவர் "டான்" என்ற புதிய திரைப் படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. டான் படத்தின் பூஜையும் சில நாட்களுக்கு முன்பு போடப்பட்ட வந்த நிலையில் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இங்கே கிடைத்துள்ளது .

"நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் பிப்ரவரி  17ஆம் தேதி வரவுள்ள நிலையில் அவர் நடித்துள்ள "அயலான்"படத்தின் "சிங்கிள் ட்ராக்" அதே தினத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது .இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர் ஏனென்றால் "டாக்டர்" படத்தின் வெளியீடு மற்றும் "டான்" படத்தின் படப்பிடிப்பு ஆகிய இன்பங்களை கேட்ட நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு  "அயலான்"படத்தின் "சிங்கிள் ட்ராக்" வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டதால் அவர்கள் மிகுந்த ஆனந்தத்திலும், மகிழ்ச்சியிலும், கொண்டாட்டத்திலும் உள்ளனர்.

From around the web