குருதி ஆட்டம் படத்தின் டப்பிங்க் பணிகள் முடிந்தது!!

பிரியா பவானி சங்கர் புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். அந்த சீரியலினை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, அதன் பின்னர் வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பினை மேயாத மான் படத்தின் மூலம் பெற்றார். முதல் படமே மிகவும் பிரபலமானதை அடுத்து, கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர், குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசடதபற, பொம்மை, இந்தியன்
 
குருதி ஆட்டம் படத்தின் டப்பிங்க் பணிகள் முடிந்தது!!

பிரியா பவானி சங்கர்  புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.

அந்த சீரியலினை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, அதன் பின்னர் வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பினை மேயாத மான் படத்தின் மூலம் பெற்றார்.

முதல் படமே மிகவும் பிரபலமானதை அடுத்து, கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர், குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசடதபற, பொம்மை, இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

குருதி ஆட்டம் படத்தின் டப்பிங்க் பணிகள் முடிந்தது!!

தற்போது கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட சம்மேளனம் சார்பில், சினிமாப் பின்னணி வேலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் டப்பிங்க், எடிட்டிங்க், இசையமைத்தல் போன்ற பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது அதர்வா- பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் டப்பிங்க் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

பிரியா பவானி சங்கர் தற்போது குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் பணியின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.  ஒருவழியாக படத்தின் டப்பிங்க் பணிகள் முடிந்துள்ளதால், ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகின்றது.

From around the web