தொடர்ந்து நிகழும் சதி… கதறி அழும் மதுமிதா…

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பிக் பாஸ் சீசன் 3 நடைபெற்று வருகிறது. முதலில் 15 போட்டியாளர்கள் பங்கு பெற்ற இந்நிகழ்ச்சியில் 16ஆவது போட்டியாளராக மீரா மிதுன் அறிமுகமானார். பிக் பாஸ் வீட்டிற்குள் மீரா மிதுன் நுழையும்போதே சண்டையையும் வரதட்சணையாக கொண்டு வந்தார் போலும். இது வெறும் ஷோ அல்ல, நம் வாழ்க்கை என்று கமல் ஹாசன் சொல்வதை நிரூபிக்கும் வகையிலேயே உள்ளது இவர்களின் நடத்தை. தினமும் சண்டை, யாராவது ஒருவரை டார்க்கெட் செய்வது என்று சென்று கொண்டிருந்தாலும் சரவணன்,
 
தொடர்ந்து நிகழும் சதி… கதறி அழும் மதுமிதா…

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பிக் பாஸ் சீசன் 3 நடைபெற்று வருகிறது. முதலில் 15 போட்டியாளர்கள் பங்கு பெற்ற இந்நிகழ்ச்சியில் 16ஆவது போட்டியாளராக மீரா மிதுன் அறிமுகமானார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் மீரா மிதுன் நுழையும்போதே சண்டையையும் வரதட்சணையாக கொண்டு வந்தார் போலும்.

 இது வெறும் ஷோ அல்ல, நம் வாழ்க்கை என்று கமல் ஹாசன் சொல்வதை நிரூபிக்கும் வகையிலேயே உள்ளது இவர்களின் நடத்தை.

தினமும் சண்டை, யாராவது ஒருவரை டார்க்கெட் செய்வது என்று சென்று கொண்டிருந்தாலும் சரவணன், சாண்டி, தர்ஷன், சேரன், ஃபாத்திமா பாபு, கவின் ஆகியோர் அவர்கள் உண்டு வேலை உண்டு என்று இருக்கின்றனர்.

தொடர்ந்து நிகழும் சதி… கதறி அழும் மதுமிதா…

மதுமிதா மற்றும் மீரா மிதுனை குரூப் பார்ம் பண்ணி டார்க்கெட் செய்கிறது வனிதா அணி. யாரு எப்போ கிடைப்பாங்கன்னு இருந்த வனிதாவுக்கு தீனி போடும்படி மாட்டிக் கொண்டார் மதுமிதா. 

அபிராமி – மதுமிதா சண்டை நடந்தபோது இப்பிரச்சனையை இதோடு விட்டு விடுங்கள் என்று லோஸ்லியா கூறியதும் உடனே அவரையும் அவர்கள் பாணியில் செய்ய ஆரம்பித்தனர் அபி மற்றும் வனிதா.

இந்நிலையில் சரவணன் கேமரா முன்பாக வந்து என்னால் இங்கு இருக்க முடியவில்லை பிக் பாஸ். தயவு செய்து எனக்குப் பதிலாக வேறு யாரையாவது வரவழைத்து என்னை வெளியில் அனுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளார்.

வேடிக்கை பார்க்கும் சரவணனுக்கே இப்படி என்றால், மாட்டிக் கொண்டு முழிக்கும் மதுமிதாகவுக்கு எப்படி இருக்கும்?. மனம் நொந்த அவர் கணவர் மற்றும் அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டதாக கூறி கதறி அழுதுள்ளார். 

From around the web