பிக்பாஸ் நிகழ்ச்சியுடன் கனெக்சன் ஆகும் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்!

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்பட பலர் நடித்த ’ஓ மை கடவுளே’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழில் இயக்கிய அஷ்வத் மாரிமுத்து ஹிந்தியிலும் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை எண்டமோல் ஷைன்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரித்த நிறுவனம் தான் இந்த எண்டமோல் ஷைன்ஸ் இந்தியா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது
’ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகாசிங், வாணிபோஜன் வேடத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த பரிசீலனை நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன