ரிலீஸான அடுத்த நிமிடமே டிரெண்டுக்கு வந்த ‘மாநாடு’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

 
ரிலீஸான அடுத்த நிமிடமே டிரெண்டுக்கு வந்த ‘மாநாடு’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புதுவையில் நடைபெற்று வருகிறது 

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நவம்பர் 21ஆம் தேதி 10.44 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அறிவித்தபடியே சரியாக இன்று 10:44 மணிக்கு ‘மாநாடு’ போஸ்டர் சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது 


இந்த போஸ்டருக்காக காத்திருந்த சிம்புவின் லட்சக்கணக்கான ரசிகர்கள் உடனடியாக இந்த போஸ்டர் குறித்த ஹேஷ்டேக்கை டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். ஒரு நடிகரின் போஸ்டர் வெளியான அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே டுவிட்டர் டிரெண்டில் வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் தொழுகையில் இருக்கும் சிம்புவின் தலையிலிருந்து ரத்தம் வருவது போன்று இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்  மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web