கணவருக்கு முத்தம் கொடுத்துவிட்டு பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற பிரபலம்!

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பிரம்மாண்டமான தொடக்க விழா நடந்தது என்பதும் அதில் 16 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரும் விஜய் டிவி பிரபலமுமான அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக ஒழுக்கமாக ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 

அதில் அவர் விஜய் நடித்த ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற ’கப்பு முக்கியம் பிகிலு’ என்ற வசனத்தை பேசி ’கண்டிப்பாக தான் பிக்பாஸ் வெற்றியாளராக ஆவேன்’ என்று கூறினார்.மேலும் தனது அன்புக் கணவருக்கு தான் முத்தம் கொடுத்து விட்டு செல்வதாகவும் முத்தம் கொடுக்கும் காட்சியையும் அந்த வீடியோவில் அவர் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறந்தாங்கி நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது என்பதும் குழந்தை பிறந்த சில மாதங்களே ஆன நிலையில் குழந்தையை விட்டுவிட்டு செல்வது தனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் அறந்தாங்கி நிஷா தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார். முந்தைய பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் நடிகை விஜயலட்சுமி மற்றும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் தங்களது ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே தனது முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவில் அவர், ‘வாழ்க்கையில் முயற்சி தவறலாம் ஆனால் முயற்சிக்க தவறலாமா, முயற்சித்து பார்ப்போம்’ என்று பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web