ரியோவை ஜாலியாக ஊக்கப்படுத்திய பிளாக்‌ஷீப் டீம்: கலகலப்பாக மாறிய பிக்பாஸ் வீடு!

 

பிக்பாஸ் வீட்டில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினராக வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே 

ஏற்கனவே நேற்று முன்தினம் ஷிவானி மற்றும் பாலாஜியின் உறவினர்கள் வந்த நிலையில் நேற்று ரியோ மற்றும் ரம்யாவின் உறவினர்கள் வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ரியோவின் மனைவி வந்த போது வீடு ஜாலியாக இருந்தது என்பதும் அது மட்டுமின்றி பிளாஸ்மா டிவியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் ரியோவின் நண்பர்களான பிளாக்‌ஷீப் டீமினர் கலகலப்பாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

rio

ரியோ தன்னுடைய மனைவியிடம் குழந்தை வரவில்லையா என்று கேட்டதற்கு குவாரண்டின் காரணமாக குழந்தை வரவில்லை என்று கூறியது ரியோவுக்கு ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும் குழந்தை குறித்த வீடியோவை ஒளிபரப்பி ரியோவுக்கு ஆறுதல் அளித்தார் பிக்பாஸ். அந்த வீடியோவில் குழந்தையையும் தனது அம்மாவையும் பார்த்த ரியோ கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் சிறிது நேரத்தில் ரியோவை சிரிக்க வைத்து விட்டார்கள் பிளாக் ஷீப் டீம் மெம்பர்க்ள். நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் ரியோ உடன் நடித்த பிளாக்ஷீப் டீம் உறுப்பினர்கள், ரியோவை கலாய்க்கும் காட்சிகள் கலகலப்பாக இருந்ததை அடுத்து செண்டிமெண்டில் இருந்து வெளியே வந்த ரியோ நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web