தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு! சோகமான குரலில் பேட்டியளித்த காளி வெங்கட்!

அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் நடிகர் காளி வெங்கட்!
 
தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு! சோகமான குரலில் பேட்டியளித்த காளி வெங்கட்!

மக்களுக்கு காமெடியோடு மட்டுமல்லாமல் சமூக கருத்துக்களையும் திணிப்பதில் நோக்கமாக வைத்து தனது படங்களின் காமெடிகளில் அவ்வாறே பணியாற்றியிருந்தார் நடிகர் விவேக். பெரிய நடிகர் சிறிய நடிகர் என்ற பாராமல் அனைத்து தரப்பினரிடமும் சகஜமாக பழகும் ஒரு நல்ல மனிதர் என்பதும் தவிர்க்க முடியாத உண்மைதான். மேலும் இவர் புதுமுக இயக்குனர்கள் பலருடனும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதும் இன்றியமையாத தகவல்தான்.

vivek

இத்தகைய நல்ல மனிதர் இன்று காலை மரணமடைந்து அனைவரையும் அழ வைத்துவிட்டார். மேலும் இவரின் அஞ்சலிக்காக சினிமா பிரபலங்கள் பலரும் இவரின் வீட்டிற்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் இவருடன் பணியாற்றிய நடிகர்களும் இவருக்கு அஞ்சலி செலுத்தி இவருடன் இருந்த தருணங்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் இவரின் இறுதி ஊர்வலம் ஆனது தற்போது தொடங்கியது. இதில் ஏராளமான மக்கள் மத்தியில் இவரின் கொண்டு செல்லப்படுகிறார்.

 இதன் மத்தியில் இவருக்கு அஞ்சலி செலுத்தி அதன் பின்னர்செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் பிரபல நடிகர் காளி வெங்கட். அப்போது அவர் கூறினார் நான் அவருடன் பணியாற்ற வில்லை ஆனாலும் அவன் என்னை பற்றி பேசியுள்ளார் என்றும் கூறினார். மேலும் இவர் நடிகனாக மட்டுமில்லாமல் ஒரு நல்ல மனிதனாக இருந்து சினிமாவிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் கூறினார். மேலும் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற மனிதர் என்றும் அவர் கூறினார். மேலும் மேலும் வெறும் காமெடியனாக இல்லாமல் அடுத்த தலைமுறைக்கும் மிகப்பெரிய சிந்தனையாளராக இருந்து ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து இருந்தார் என்றும் அவர் மிக சோகமான குரலில் பேட்டி அளித்தார்.

From around the web